எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பலியாகினர். தீ விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து கடலில் பயணிகள் குதித்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தின் உள்ள நாட்டின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள தாலிஸ் தீவில் கிரிகோரியஸ் பார்சிலோனா 5 என்ற கப்பல் 280 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் சென்று மனாடோ துறைமுகத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. கடலில் சென்று கொண்டிருந்த போது அந்த கப்பலில் திடீரென தீப்பிடித்து கரும்புகையுடன் எரியத் தொடங்கியது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். சுமார் 150 பேர் மீட்கப்பட்டதாக மாகாண தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் மூத்த அதிகாரி வெரி அரியான்டோ தெரிவித்தார். மீட்பு பணி நடந்துவரும் நிலையில், உயிர் தப்பிப்பதற்காக கப்பலில் இருந்த பயணிகள் கடலில் குதித்தனர். குழந்தைகளுடன் கடலில் குதித்த தத்தளித்த பெண்கள், தங்களை காப்பாற்றக் கோரி குரல் எழுப்பிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கப்பலில் இருந்த பயணிகள் அவசரமாக உயிர்காக்கும் கவசங்களை அணிந்தபடி செல்போன் மூலம் உதவி கோரி அழைப்பு விடுக்கும் காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இரண்டு கப்பல்கள், படகுகள் ஈடுபட்டுள்ளன.