"நான் உயிரோடு இருக்கிறேன்" : பூனம் பாண்டே வெளியிட்ட வீடியோ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழந்ததாக தகவல் பரவிய நிலையில், தான் உயிரோடு இருப்பதாக  பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் நேற்று உயிரிழந்ததாக தகவல் பரவியது. இந்த தகவல் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று பூனம் பாண்டேவே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் இறக்கவில்லை என்றும், கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காகவே இப்படியான செயலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

varient
Night
Day