"டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் நீக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய பாடல் வரிகள்   நீக்கப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. சமீபத்தில் இப்படத்திலிருந்து 'கோவிந்தா' என்று தொடங்கும் பாடல் வெளியானது. அதில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பாடல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், பாடலை படத்திலிருந்து நீக்கக் கோரியும், 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டும் பட நிறுவனத்திற்கும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சர்ச்சைக்குரிய பாடல் வரியை படக்குழு நீக்கியுள்ளது.

Night
Day