டெல்லியில் தனியார் கல்லூரியில் தீ விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் உள்ள தனியார் கல்லூரி நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

வடமேற்கு டெல்லியின் பிதாம்பூரா பகுதியில் உள்ள குரு கோபிந்த் சிங் வணிகக் கல்லூரியின் நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது மளமளவென அருகில் உள்ள 3 தளங்களுக்கும் பரவி கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்துள்ளது.  தொடர்ந்து 11 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர். அதன்படி காலை 9 மணியளவில் பிடித்த தீயானது காலை 9.40 மணியளவில் அணைக்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  மாணவர்கள் உள்ளிட்டோர் யாரும் அப்பகுதியில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Night
Day