SSI கொலை - என்கவுன்டரில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மூங்கில் தொழுவு ஊராட்சி சிக்கனூத்து கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், தந்தை மகன்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்து சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் தகராறை தடுக்க முயன்றார். அப்போது, தந்தை மூர்த்தி, மகன்கள் மணிகண்டன், தங்கபாண்டியன் ஆகியோர் தாக்கியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உயிரிழந்தார். 

இதனிடையே தப்பிய 3 பேரில் தந்தை மூர்த்தி மற்றும் மகன் தங்கபாண்டியன் ஆகிய இருவர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு மகனான மணிகண்டனை கைது செய்த தனிப்படை போலீசார், விசாரணைக்காக சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தாக்குதல் நடத்திவிட்டு தப்ப முயன்ற மணிகண்டனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் உயிரிழந்தார். தாக்குதலில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணக்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Night
Day