தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில், தனியார் தொழிற்சாலையில் மூன்று சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை, மூலக்கடை அருகே அட்டை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் மூன்று சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்துக்குள்ளானது. தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்ட அட்டை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகின. 

Night
Day