15 வயது சிறுவன் மற்றும் பாட்டியை கொடூரமாக தாக்கிய போலீசார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 மத்தியப் பிரதேச மாநிலம் கட்னியில் உள்ள ரயில்வே காவல்நிலையத்தில் 15 வயது சிறுவனையும் அவனது பாட்டியையும் சரமாரியாக தாக்கிய பெண் போலீஸின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


15 வயது சிறுவன் மற்றும் அவனது பாட்டி ஆகியோரை திருட்டு வழக்கு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இருவரையும் பெண் போலீசார் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஏஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று கட்னி எஸ்பி அபிஜீத் குமார் ரஞ்சன் தெரிவித்தார். இந்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை நிலவுவதை காட்டுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுவனையும், பாட்டியையும் ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளதாக மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day