மறைந்த திரு.M.ராமசந்திரன் படத்தை திறந்து வைத்து புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை அருகே நடைபெற்ற மறைந்த திரு. M.ராமசந்திரனின் படத்திறப்பு நிகழ்ச்சியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு M.ராமசந்திரனின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் கணவர் மறைந்த திரு.M.நடராஜனின் இளைய சகோதரர் திரு.M.ராமசந்திரன் உடல்நலக்குறைவால் கடந்த 11ம் தேதி காலமானார். தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் நடைபெற்ற இறுதி சடங்கில் கலந்துகொண்ட கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திரு. M.ராமசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், திரு.M.ராமசந்திரனின் மறைவையொட்டி அன்னாரின் திருவுருவ படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் அன்னாரது பூர்வீக இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு திரு.M.ராமசந்திரனின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Night
Day