"நெல்மணிகளை கொள்முதல் செய்வதில் விளம்பர திமுக அரசு அலட்சியம்" - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை முறையாக கொள்முதல் செய்யவில்லை என்றும் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதற்கும், விவசாயிகள் பரிதவிப்புக்கும் விளம்பர திமுக அரசின் தோல்வியே காரணம் என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். 2026ல் மீண்டும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சி அமைந்தால் தான் அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும் என புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பின்னையூர்நாடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் குவியல்களை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளிடமும் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். 

பின்னர் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, விளம்பர திமுக அரசு செயல்படாத அரசாக உள்ளது என தாம் தொடர்ந்து கூறி வருவதை இந்த அரசு நிரூபித்து வருவதாக குற்றம்சாட்டினார். திமுக அரசு மக்களை கண்ணீர் சிந்தவிட்டும், சாலையில் தவிக்க விட்டும் வருவதாக சாடிய புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் நிம்மதி இழந்துள்ளதாக கூறினார். திராவிட மாடல் அரசு என கூறிக் கொள்ள வெட்கமாக இல்லையா என கேள்வி எழுப்பிய புரட்சித்தாய் சின்னம்மா, விளம்பர திமுக அரசுக்கு 2026 தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

Night
Day