நெல்கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் முளைத்து சேதமடைந்துள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பின்னையூர்நாடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் குவியல்களை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளிடமும் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அரசு கொள்முதல் நிலையங்களின் அலட்சியத்தால் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளும் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் டெல்டா விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதி, திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பின்னையூர்நாடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் குவியல்களை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டு, பயிர்களின் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் தாயுள்ளத்துடன் கேட்டறிந்தார்.

அப்போது, நெல்கொள்முதல் செய்ய போதிய சாக்குகளும் லாரிகளும் இல்லை என புரட்சித்தாய் சின்னம்மாவிடம் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். அவர்களின் குறைகளை தாயுள்ளத்துடன் கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியின்போது நெல் கொள்முதல் செய்ய கூடுதலாக 112 குடோன்கள் திறக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த விளம்பர திமுக ஆட்சி அறிக்கை மற்றும் விளம்பரத்திற்காக மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

வழிநெடுக கொட்டப்பட்டிருந்த நெல் மணிகளை பார்த்து வேதனையடைந்த புரட்சித்தாய் சின்னம்மாவிடம், மழைக்கு முன்பாக அறுவடை செய்யட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்ய இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர். ஈரமடைந்ததோடு முளைத்தும் இருப்பதால் காயவைத்தாலும் இனி எந்த பயனும் இல்லை என்று விவசாயிகளிடம் தனது கவலையை புரட்சித்தாய் சின்னம்மா பகிர்ந்து கொண்டார். புரட்சித் தலைவி அம்மா ஆட்சியில் இதுபோன்று நடக்கவில்லை என்றும் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி விவசாயிகளுக்கு நல்லதையே செய்ததாக கூறிய புரட்சித்தாய் சின்னம்மா, இந்த விளம்பர திமுக அரசு விவசாயிகளை மொத்தமாக கைவிட்ட தகுதி இல்லாத அரசாக இருப்பதாக  குற்றம் சாட்டினார். 

தொடர்ந்து பின்னையூர்நாடு பகுதியில் குறைகளை கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மாவிடம், கடந்த 10, 15 நாட்களாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கொள்முதல் செய்யப்படாததால் நெல் மணிகள் முளைத்து விட்டதாகவும் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

எப்போது நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என தெரியாமல் நாள் கணக்காக காத்திருக்கும் விவசாயிகளிடம் புரட்சித்தாய் சின்னம்மா குறைகளை தாயுள்ளத்துடன் கேட்டறிந்தார். அப்போது, விஏஓ தவிர மேலதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று புரட்சித்தாய் சின்னம்மாவிடம் விவசாயிகள் புகார் கூறினர். ஒரு நாளைக்கு 2 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதாக அரசு கூறியும் இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டிய விவசாயிகள், விளம்பர திமுக அரசின் செயல்பாட்டால் கொதித்துப் போயுள்ளதாக ஆவேசமுடன் கூறினர்.

தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, மழையில் முளைத்த நெல் மணிகளை கையில் எடுத்து ஆய்வு செய்தார். பின்னர், நெல் கொள்முதல் குறித்து அங்கிருந்த பெண் விஏஓ-விடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். எவ்வளவு விளைச்சல் ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய பட்டியலை கொடுப்பீர்களா, மாட்டீர்களா என விஏஓ-விடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய புரட்சித்தாய் சின்னம்மா, அரசாங்கம் தன்னுடைய வேலையை சரியாக செய்திருந்தால் முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டாமா என்றும் வினவினார். அரசு சரிவர செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய புரட்சித்தாய் சின்னம்மா, டெல்டா மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நெல் கொள்முதல் விஷயத்தில் அரசின் மீதுதான் தவறு உள்ளது என்றும், விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாத உருப்படாத அரசாக விளம்பர திமுக அரசு உள்ளதாகவும் கடுமையாக சாடினார்.

நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் கவலையுடன் காத்துக் கிடக்கும் விவசாயிகளிடம் தாயுள்ளத்துடன் குறைகளை கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மாவிடம், தூக்கமின்றி நாள் கணக்காக காத்துக் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து நெல் பாதிப்புகளை பார்வையிட்ட புரட்சித்தாய் சின்னம்மா விவசாயிகளிடம் குறைகளை தாயுள்ளத்துடன் கேட்டறிந்தார். அப்போது, தன்னுடைய 200 சிப்பம் நெல் மூட்டைகள் 20 நாட்களுக்கு மேலாக கிடப்பதால் முளைத்து விட்டதாக விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தன்னுடைய துயர நிலையை பகிர்ந்து கொண்டார்.

Night
Day