எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேலூர் மாவட்டம் பொன்னை அருகே 15 சென்ட் நில பிரச்சனை காரணமாக சித்தப்பா மகனை கூலிப்படை உதவியுடன் வெட்டிக்கொலை செய்த நபர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
S.N.பாளையத்தை சேர்ந்த வெங்கட் ராமன் என்பவர், கடந்த 4ம் தேதி வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், வெங்கடரமணனின் பெரியப்பா மகனான திருப்பதியைச் சேர்ந்த சின்னப்பரெட்டி உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட வெங்கட்ராமனுக்கும், சின்னப்பாரெட்டிக்கும் இடையே 15 சென்ட் நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. மேலும், வெங்கட்ராமனுக்கு திருமணம் ஆகாததால் அவருக்கு சொந்தமாக உள்ள 5 ஏக்கர் நிலம் மற்றும் வீடை அபகரிக்கவே கூலிப்படை உதவியுடன் கொலை செய்ததாக சின்னப்பரெட்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.