11 வயது சிறுவனுக்கு வலைவீச்சு

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பள்ளிக்குச் சென்ற மாணவனை மர்ம நபர்கள் கத்தியால் கழுத்தை அறுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வத்தலகுண்டு அடுத்த அருணாசலபுரம் பகுதியை சேர்ந்த முனியப்பன்- வசந்தி தம்பதியின் 11 வயது மகன் முனிஸ்வரன். சிறுவன் வழக்கம் போல், பள்ளி சென்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் முகத்தை மறைத்த நிலையில் நீளமான கத்தியை எடுத்து மாணவன் முனீஸ்வரன் கழுத்தில் வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்து மயங்கி விழுந்த சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வத்தலகுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Night
Day