வேற மாதிரி ஆயிரும் - எஸ்.பி. மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், கூடுதல் நிவாரணம் கேட்டு போராடிய உறவினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மிரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.
 
சிவகாசியை சேர்ந்த கமல் குமார் என்பவர் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் கோகுலம் பட்டாசு ஆலையை உரிமம் பெற்று நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த பட்டாசு ஆலையில் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு மருந்து கலவையின் போது உராய்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் இருந்த 8 அறைகளும் தரைமட்டமாகின. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் விண்ணை முட்டும் அளவுக்கு புகைமூட்டம் எழுந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 8 பேர்  உயிரிழந்தனர்.

இதனிடையே, கூடுதல் நிவாரணம் கேட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் போராட்டததை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்றும், இல்லையென்றால் வேறு மாதிரி ஆகிவிடும் என உறவினர்களை பார்த்து மிரட்டியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

varient
Night
Day