வெட்டி கொல்லப்பட்ட ஜாகீர் உசேன் பேசிய கடைசி வீடியோ

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை டவுண் பகுதியில் மர்மநபர்களால் வெட்டி கொல்லப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி ஜாகிர் உசேன் பேசிய கடைசி வீடியோ வெளியீடு

முன்னாள் காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொல்லப்படுவதற்கு முன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தான் கொல்லப்பட்டால் அதற்கு காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையர் செந்தில் குமார் தான் காரணம் என கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தொடர்ந்து 30 பேரிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். இதுகுறித்து முதலமைச்சருக்கு இணைய தளம் மூலமாக புகார் அளித்துள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்த பிறகும் தமிழக அரசும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விளம்பர திமுக ஆட்சியில் தொடரும் கொலை சம்பவங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Night
Day