வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி 40 சவரன் நகை கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை அருகே ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் அரிவாளை காட்டி மிரட்டி 40 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

சிக்கல் பகுதியில் வசித்து வரும் வைத்தியநாதன் என்பவர் தனியார் உர நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இந்நிலையில், இரவு வீட்டின் பின்புற கதவை உடைத்து பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த மர்மநபர்கள் வைத்தியநாதன் மகனின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த 40 சவரன் தங்க நகை, வெள்ளி டம்ளர் உள்ளிட்ட வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Night
Day