க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் பெரியப்பாவை வெட்டிக்கொலை செய்துவிட்டு எரித்த நபர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்த ராதா என்பவருக்கும், அவரது தம்பி மகனான கர்ணன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வெங்கட்டையாபுரம் செல்லும் சாலையில் உள்ள தென்னந்தோப்பில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்படவே, கர்ணன் தான் வைத்திருந்த அரிவாளால் பெரியப்பாவை வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் தேங்காய் மட்டைகளுக்குள் உடலை வைத்து எரித்துவிட்டு வத்திராயிருப்பு காவல்நிலையத்தில் கர்ணன் சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...