லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் - 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குப்பை கொட்டுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
அம்மம்பாளையத்தில் குப்பை கொட்டுவது மற்றும் கார் நிறுத்துவது தொடர்பாக அனிதா - அன்பரசி ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதே நாளில் அன்பரசி மகன் பூபதிராஜாவுக்கு ஆதரவாக அவரது உறவினர் பாலமுருகன் லாரியை எடுத்து அங்கிருந்த பெண்கள் உள்ளிட்டோர் மீது வேகமாக ஏற்ற முயன்றதுடன், அனிதா வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மீதும் மோதினார். இதுகுறித்து அனிதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் 2 பெண்களை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

varient
Night
Day