லாக்-அப் மரணம் - மனித உரிமை ஆணையம் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள பத்ர காளியம்மன் கோயிலில் நகை காணாமல் போனது தொடர்பான விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட கோயிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றிய அஜித்குமார், போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், 6 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணை பிரிவு ஐ.ஜி.க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Night
Day