எழுத்தின் அளவு: அ+ அ- அ
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் அடித்து சித்ரவதை செய்து காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தங்க நகை திருடியதாக கூறப்பட்ட புகாரில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் அடித்து சித்ரவதை செய்ததில் அஜித்குமார் உயிரிழந்தார். மாநிலத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் முக்கிய ஆதாரமாக அஜித்குமார் பணியாற்றிய கோயிலில் பணியாற்றிய சக்தீஸ்வரன் என்பவர் பதிவு செய்த செல்போன் வீடியோ முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இந்த கொடூர மரணம் தொடர்பாக நாளுக்கு நாள் ஆதாரங்களும் சாட்சிகளும் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மடப்புரம் அரசினர் மாணவர் விடுதி அருகே காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி அஜித்குமாரை விசாரணை நடத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கடந்த 29ம் தேதி தனிப்படை காவல்துறையினர் அஜித்குமாரை மடப்புரம் கால்வாய் அருகே போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி பல மணி நேரம் கழித்து அழைத்து சென்றுள்ளனர். அஜித்குமார் ஏற்றப்பட்ட காவல் வேன் முன்னாள் செல்ல போலீஸ் கார் ஒன்று அதனைத் தொடர்ந்து செல்வதும் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.