ரூ.25 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 25 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

க.க. சாவடி பகுதியில் மதுக்கரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கேரளா நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, உரிய ஆவணங்கள் இன்றி 25 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை எடுத்துச் சென்ற இருவரும் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் ரகுமான் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் பணம் குறித்து முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day