ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி - மத்திய நிதி அமைச்சகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி மூலம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 735 கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் வசூலான தொகையைவிட 7.5 சதவீதம் அதிகம். இதன் மூலம் தொடர்ச்சியாக 7 மாதமாக ஜிஎஸ்டி வசூல் 1.8 லட்சம் கோடியை தாண்டியது. மொத்த உள்நாட்டு வருவாய் 6.7 சதவீதம் அதிகரித்து 1.43 லட்சம் கோடியாகவும், இறக்குமதி வரி 9.5 சதவீதம் அதிகரித்து 52 ஆயிரத்து 712 கோடியாகவும் உள்ளது. 

Night
Day