க்ரைம்
விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரயில் நிலையத்தில் இரு பெண் குழந்தைகளுடன் தாய் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அம்மூர் அடுத்த வேலம் பகுதியை சேர்ந்த அறிவழகன், ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை முதலில் திருமணம் செய்து கொண்ட நிலையில், வெண்ணிலா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெனிஸ்ரீ, தர்னிகா என இரு பெண் குழந்தைகள் இருந்தனர். முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு தள்ளுபடியானதால், விஜயலட்சுமி கணவருடன் சேர்ந்து வாழ வந்ததால், வெண்ணிலாவுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த வெண்ணிலா, இரு பெண் குழந்தைகளுடன் வாலாஜா ரயில் நிலையத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற ரயில்வே போலீசார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...