முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு - வரும் 12-ம் தேதி தீர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசின் மேல்முறையீட்டு வழக்கில் வரும் 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுமென விழுப்புரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட  நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி வாதாடி தனது வாதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து இன்று ராஜேஷ்தாஸ் அளித்த வாதத்திற்கு பதிலளிக்கும் விதமாக அரசு தரப்பு வாதம் அரைமணி நேரம் நடந்து நிறைவு பெற்றது. இதையடுத்து இருதரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில், வரும் 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுமென நீதிபதி பூர்ணிமா அறிவித்தார்.

Night
Day