எழுத்தின் அளவு: அ+ அ- அ
முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொளத்தூர் பெரவள்ளூர் பகுதியில் இளைஞர் சந்துருவை கஞ்சா போதையில் இருந்த மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்து இருந்த பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சந்துருவை பார்த்து அந்த நபர்கள் எச்சரிக்கை விடுத்து தப்பிச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சந்துருவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், இளைஞர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் அருணாச்சலம் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் அங்கேறிய இந்த கொடூர கொலை சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.