மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர்கள் இருவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இரண்டும் ஆசிரியர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணியார்பாளையம் கிராமத்தில் பழங்குடியினரின் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் தனபால், பாலியல் தொந்தரவு அளிப்பதாக கல்வி அதிகாரிகளுககு முதலில் புகார்கள் வந்தது. இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

விசாணையில் தலைமை ஆசிரியர் தனபால், இயற்பியல் ஆசிரியர் ராஜவேல் மற்றும் பகுதி நேர ஆசிரியர் தேவேந்திரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரியவந்தது. தனை அடுத்து தலைமை ஆசிரியர் தனபாலை சஸ்பெண்ட் செய்யபட்ட நிலையில், தலைமறைவாகியுள்ளார். பகுதி நேர ஆசிரியர் தேவேந்திரன் மற்றும் ஆசிரியர் ராஜவேல் போக்சோவில் கைது செய்தனர்.

varient
Night
Day