மாணவனை நிர்வாணப்படுத்தி ராகிங் - 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் செக்கானூரணி ஐ.டி.ஐ. விடுதியில் நள்ளிரவில் மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில், விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செக்காணூரணியில் செயல்படும் ஐ.டி.ஐ. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர் ஒருவரை சக மாணவர்கள் நிர்வாணப்படுத்தி காலணியால் தாக்கி துன்புறுத்துவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. நள்ளிரவு நடந்த மனித உரிமை மீறல் சம்பவம் மாணவர் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சம்பவத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களுக்கு எதிராக ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விடுதி காப்பாளர் பாலசுப்பிரமணியன் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்கள் தங்கி, கல்வி கற்கும் விடுதிகளை கண்காணிக்க போதுமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விடுதியில் தங்கும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிரப்பப்படாமல் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Night
Day