மதுரை : பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

பாசிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஷர்மிளா என்பவர், திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், ஷர்மிளா வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 250 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஷர்மிளா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அலங்காநல்லூர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். 

Night
Day