மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் நகைகள் திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராயபுரம் அரசு ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணியிடம் மருத்துவமனைக்குள் புகுந்த திருட்டு கும்பல், அரை சவரன் தங்க சங்கிலி, கொலுசு, மெட்டி, 4 ஆயிரம் பணம் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கர்ப்பிணியின் தாயார் கமலா கொடுத்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Night
Day