பேருந்து மோதி சிறுமி பலி - பொதுமக்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டில் மோதிய விபத்தில்  படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி அடுத்த நூலஹள்ளி கிராமத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த அரசுப் பேருந்தை தேவராஜ் என்பவர் இயக்கி வந்துள்ளார். உழவன்கொட்டாய் அருகே பேருந்து வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த ராமு என்பவரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டிருந்த நரசிம்மமன்-சோனியா தம்பதியின் 4 வயது மகள் அத்விகாவும், பேருந்து ஓட்டுநரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிறுமி அத்விகா, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே தருமபுரி நகர்ப்புறங்களில் இயக்கப்படும் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் காலாவதியான பேருந்துகளாக இருப்பதால், அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர். விளம்பர திமுக அரசு காலாவதியான பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Night
Day