பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


வேலூரில் பெண் மருத்துவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சிறார் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

வேலூர் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் மருத்துவரை கடந்த 2022ம் ஆண்டு ஆட்டோவில் 5 நபர்கள் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில், ஏற்கனவே ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், கூலி தொழிலாளி மணிகண்டன் உட்பட நான்கு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், ஐந்தாவது குற்றவாளியான 17-வயது சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 23 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

Night
Day