பூட்ஸ் காலால் இளைஞரின் காலை நசுக்கும் காட்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்புவனம் இளைஞர் லாக்கப் மரணத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பட்டியலின இளைஞரை போலீசார் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன், தனது கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை தரக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன், சம்பந்தப்பட்ட அன்றைய தினம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தேவதானப்பட்டி காவல் நிலையத்திலிருந்து வழக்கறிஞர் பாண்டியராஜனுக்கு வழங்கப்பட்டது. அதை அவர் ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து இழுத்து வந்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதில், அந்த இளைஞர் காலில் விழுந்து தன்னை விட்டு விடும்படி கெஞ்சியும் காவல் ஆய்வாளர் அபுதல்கா உள்ளிட்ட போலீசார் அவரை மாறிமாறி பூட்ஸ் காலால் தாக்கியது பதிவாகி இருந்தது. சம்பந்தப்பட்ட இளைஞர் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த  ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பதும், கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதும் தெரியவந்தது.

Night
Day