புதிய வீடுகளின் கண்ணாடிகளை உடைத்து இளைஞர்கள் அட்டகாசம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே புதிய குடியிருப்புகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆத்திகுளம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதனை பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கஞ்சா போதையில் இருந்த சிலர், குடியிருப்புகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் புதூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். 

Night
Day