பிரிக்கப்படாத சொத்து விற்பனை - அண்ணனை துரத்தி, துரத்தி வெட்டிய தம்பி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, நிலப்பிரச்சனை காரணமாக அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். 

கட்டக்கூத்தன்பட்டியை சேர்ந்த விவசாயி பொன்னையா. இவருக்கு முன்னாள் ராணுவ வீரர் சங்கன், மகாமுனி ஆகிய சகோதரர்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான சுமார் 6 சென்ட் நிலத்தை  பொன்னையா விற்பனை செய்தாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் ராணுவ வீரர் சங்கன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நிலத்தை சர்வே செய்வதற்காக குல்லலக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் வருவாய் துறையினர் சென்றுள்ளனர்.

அப்போது, அங்கு அண்ணன் தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சங்கன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பொன்னையாவை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பொன்னையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் சங்கனை கைது செய்தனர். இந்நிலையில், அண்ணனை முன்னாள் ராணுவ வீரர் அரிவாளால் வெட்டும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

Night
Day