உயர்நீதிமன்றத்தில் சிறுமி தற்கொலை முயற்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைக்கு ஆஜராகி இருந்த 15 வயது சிறுமி, நீதிமன்ற முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பெற்றோரின் குடும்ப பிரச்னை தொடர்பாக ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்காக 15 வயது மகள் ஆஜராகியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென முதல் தளத்தில் இருந்து குதித்து சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியின் தாய் அந்தமானை சேர்ந்தவர் என்றும், தந்தை சென்னையை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. 

மேலும், தாய் மறுமணம் செய்து கொண்டதால், மகளை தன்னிடம் ஒப்படைக்ககோரி தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல்செய்துள்ளார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தாய் மறுமணம் செய்து கொண்டதால் சிறுமியை காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதனால் மனமுடைந்த சிறுமி, உயர்நீதிமன்றத்தின் முதல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Night
Day