எழுத்தின் அளவு: அ+ அ- அ
கட்டு கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது எரிந்த நிலையில் கட்டு கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் நீதித்துறையின் மீது கேள்விகளை எழுப்பிய நிலையில், மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு அமைத்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் விசாரணை அறிக்கையை பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் குடியரசு தலைவர் வழிகாட்டுதலின் இன்று மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா-வை பதவி நீக்கம் செய்வதற்கான முன்மொழிவை 146 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என சபாநாயகர் கூறினார். அதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் ,சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மணிந்தர் மோகன் ஸ்ரீ வாஸ்தவா , கர்நாடகாவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பி.வி ஆச்சார்யா ஆகியோர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஓம் பிர்லா கூறியுள்ளார்.