பம்மலில் உணவக மேலாளர் பலியான சம்பவத்தில் தந்தை, மகன் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் அடையாறு ஆனந்த பவன் உணவக மேற்பார்வையாளர் தாக்‍கப்பட்டு பலியான சம்பவத்தில், தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். அனகாபுத்தூரை சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மகன் அருண் குமார் ஆகிய இருவரும் உணவு வாங்க, பம்மலில் உள்ள அடையாறு ஆனந்த பவன் உணவகத்திற்கு வந்துள்ளனர். உணவு பார்சல் வாங்கியதும் அவர்கள் கூடுதலாக சாம்பார் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உணவக ஊழியர் சாம்பார் தர மறுத்ததால் தந்தையும் மகனும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்‍ கேட்ட உணவக மேற்பார்வையாளர் அருணை தாக்கியதில், அவர் தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அருணை மருத்துவமனைக்‍கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day