பத்தாம் வகுப்பு மாணவனை அடித்த தலைமை ஆசிரியர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக அடித்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். பாப்பாபட்டி கிராமம் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் ஜெகன், பள்ளி வளாகத்தில் மாடியில் உள்ள வகுப்பறையை தூய்மை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது தவறுதலாக மாணவனின் கை தவறி துடைப்பம், கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகனின் கார் மீது விழுந்து உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், துடைப்பத்தை கீழே போட்டது யார்? என கேட்டு விசாரித்து மாணவன் ஜெகனை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது.  இதில் ஜெகனுக்கு கையின் எலும்பு ஜவ்வு பாதித்தும், உடலில் பல பாகங்களில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் சந்திரமோகனை கைது செய்தனர். 

varient
Night
Day