பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற பெண் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அருகே பிறந்து 11 நாட்களான பெண் குழந்தையை விற்க முயன்ற இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் பிரகாஷ் - விஜயசாந்தி தம்பதிகளுக்கு கடந்த ஜூலை 25-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் 4-வது பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தம்பதியினர் ஆகஸ்ட் 4-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது வீரம்மாள் என்பவர் குழந்தையை விற்பனை செய்வதற்காக வாங்கி சென்றுள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல உதவி எண்ணுக்கு புகார் வந்தது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள தனது தோழி வீட்டிற்குச் சென்று வீரம்மாள் குழந்தையை விற்க முயன்ற போது போலீசார் அவரை மடக்கிப் பிடித்த கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Night
Day