நெல்லையில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - உறவினர்கள் மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி செயலாளரின் ஓட்டுநரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அம்பாசமுத்திரத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியின் செயலாளருக்கு ஓட்டுநராக இருந்த மணிக்குமார் என்பவருக்கும் 10ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

கடந்த 6ம் தேதி மாணவியின் வீட்டிற்குள் புகுந்த ஓட்டுநர் மணிக்குமார், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவி சத்தம்போடவே, அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்த மணிக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக, மாணவியின் பெற்றோர் பள்ளியின் செயலாளரிடம் புகாரளித்துள்ளனர். பின்னர் பாலியல் தொல்லை குறித்து பெற்றோர் வெளியே சொன்னதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை பள்ளி நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநரை கைது செய்யக்கோரியும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உறவினர்கள் அம்பாசமுத்திரம் - ஆலங்குளம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

உறவினர்களின் போராட்டத்தை தொடர்ந்து, ஓட்டுநர் மணிக்குமாரை கைது செய்தும், பள்ளிச் செயலாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day