நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன், தங்கபாலு உள்ளிட்ட 32 பேருக்கு சம்மன் அனுப்பியது சிபிசிஐடி

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக, காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்ட 32 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூர் கிராமத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கில், அவருடைய மனைவி, 2 மகன்கள், மகளிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு உள்ளிட்ட 32 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நாளை மறுதினம் முதல் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஒரு நாளைக்கு இரண்டு பேர் வீதம் தினமும் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பான விபரங்களை அளிக்கவுள்ளனர்.

Night
Day