நாகை: திருமருகல் அருகே கள்ளச்சாராயம் விற்ற நபர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் திருமருகல் அருகே கள்ளச்சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்து 400 மது பாட்டில்கள் மற்றும் 110 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர். கோட்டூர் பகுதியில் திருக்கண்ணபுரம் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது மேலப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், காரைக்காலில் இருந்து சாராயம் வாங்கி வந்து விற்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜீவ்காந்தியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 400 மது பாட்டில்களையும், 110 லிட்டர் கள்ளசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

varient
Night
Day