கன்னியாகுமரி: நள்ளிரவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் இரவின்புதூர்கடை அருகே வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதியக்கோரி நள்ளிரவில் வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவின்புதூர் கடை பகுதி சீனு, தனது நண்பரும் வழக்கறிஞருமான ஜெப்பினோவுடன் ஈச்சன்விளையில் உள்ள தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து தான் தாக்கப்பட்டதாக ஜெப்பினோ திருவட்டார் போலீசில் புகாரளித்தார். தொடர்ந்து வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதியக்கோரி 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நள்ளிரவில் திருவட்டார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

varient
Night
Day