எழுத்தின் அளவு: அ+ அ- அ
நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
கடந்த 3ம் தேதி சென்னை எழும்பூரில் நடைபெற்ற சமுதாய கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசிய வீடியோ வைரலாகி சர்ர்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது வழக்கு பதியப்பட்டது. இந்த புகாரில் முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில் தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது.