தோழி அறையில் இரவு முழுவதும் தங்கி இருந்த கல்லூரி மாணவி மர்ம​மரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கேளம்பாக்‍கம் தனியார் கல்லுரியில் தோழியின் அறையில் இரவு தங்கி இருந்த மாணவி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேளம்பாக்கம் அடுத்த தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஊரிலிருந்து திரும்பி தனது தோழியின் அறையில் தங்கி இரவு முழுவதும் மது குடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day