தெலங்கானா : தேர்தல் பறக்கும் படை சோதனை - ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 5 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் நல்கொண்டா பகுதியில் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மிரியால்குடாவில் இருந்து கம்மம் நோக்கி வந்த வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்களின்றி 5 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day