தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் முர்மு ஏற்றுக்கொண்ட நிலையில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Night
Day