க்ரைம்
இளைஞர் அஜித்குமாருக்கு காவலர்கள் கஞ்சா கொடுத்து தாக்குதல் - நேரில் பார்த்த மனோஜ்பாபு பரபரப்பு பேட்டி...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போ...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மனைவியை கடித்துக் குதறிய கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சங்கரன்கோவில் திருவிக தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கம். இவர் அவ்வப்போது மது அருந்திவிட்டு மனைவி நாகலட்சுமியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதில் மன வேதனை அடைந்த நாகலட்சுமி பலமுறை போலீஸில் கணவன் மீது புகாரளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு வந்த கணவரிடம் நாகலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராமலிங்கம், மனைவியை கை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கடித்து குதறியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நாகலட்சுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போ...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...