தூத்துக்குடி : 4 மாத குழந்தை கடத்தல் - 10 தனிப்படைகள் அமைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அருகே சாலையோரத்தில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 4 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலுரை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட சந்தியா என்ற இளம்பெண், தூத்துக்குடி அந்தோணியர் கோயில் அருகே தனது 4 மாத பெண் குழந்தையுடன் சாலையோரத்தில் தங்கி யாசகம் எடுத்து பிழைப்பை நடத்தி வருகிறார். வழக்கம்போல் சந்தியா தனது 4 மாத குழந்தையுடன் இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்மநபர் குழந்தையை கடத்தி சென்றார். குழந்தையை ஒருவர் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின நிலையில், குழந்தையை மீட்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Night
Day