துறைமுக அதிகாரி வீட்டில் 28 சவரன் நகை கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராயப்பேட்டையில் துறைமுக அதிகாரி வீட்டில் 28 சவரன் நகை கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

சென்னை ராயப்பேட்டை முத்தையா பகுதியை சேர்ந்த துறைமுக அலுவலக உதவி மேலாளரான ராமானுஜம், குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day