க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்ணதாசன் நகரை சேர்ந்த ராபர்ட் என்பவர் காக்களூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண்ணை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகார் பேரில் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரான ராபர்ட், மீண்டும் காவல் நிலையம் வந்துள்ளார். அப்போது காவல் நிலைய வாசலில் அப்பெண்ணின் தம்பி மௌலி, ராபர்ட்டை தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ராபர்ட் காவல் நிலைய வாசலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து மௌலியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...